வீட்டு உரிமையாளர்களையும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட் அப் NoBroker.com
வீட்டு உரிமையாளர்களையும், வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் மற்றும் சொந்தமாக வீடு வாங்குபவர்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக NoBroker.com ஸ்டார்ட் அப் நிறுவனம் இணைக்கிறது. இப்போது சென்னை, மும்பை, புனே, பெங்களூர் உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் வீட்டு உரிமையாளர்களையும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் இணைத்து தனது சேவையை செய்து வருகிறது.

வீட்டை வாடகைக்கு விடும் விருப்பம் இருப்பவர்கள், வீட்டை விற்பனைச் செய்ய விருப்பம் இருப்பவர்கள் NoBroker –யில் தங்களின் வீட்டை பற்றி பதிவு செய்யலாம். வாடகைக்கு தேவைப்படுபவர்கள் எந்தவித இடைத்தரகர் கமிசனும் இல்லாமல் நேரடியாக வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
PLEASE READ ALSO: நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்
சிங்கப்பூரை சேர்ந்த BEENEXT & Digital Garage துணிகர முதலீட்டு நிறுவனமும் (venture capital firm), BEENOS துணிகர முதலீட்டு நிறுவனமும் மற்றும் Asuka holdings முதலீட்டு நிறுவனத்தை சேர்ந்த Qualgro and Mamoru Taniya போன்றோர்களும் NoBroker -யில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முதலீடு செய்துள்ளனர். ஏற்கனவே SAIF Partners துணிகர முதலீட்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி,2015-யில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முதலீடு செய்துள்ளது.

இந்த புதிய முதலீட்டு தொகையை (new round of funding) வைத்து தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஊழியர்களை பணியமர்த்தல், மார்க்கெட்டிங் நடவடிக்கைகள், அடுத்த இரண்டு வருடங்களில் தனது சேவையை 20 நகரங்களில் விரிவாக்கப் போவதாக NoBroker தெரிவித்துள்ளது.
இப்போது NoBroker -யில் 150 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். IIT- மும்பை முன்னாள் மாணவர் அகில் குப்தா, IIT- கான்பூர் மற்றும் IIM- அஹமதாபாத் முன்னாள் மாணவர் அமித் குமார் அகர்வால் இருவரும் 2013 இல் NoBroker -ஐ நிறுவினார்கள்.
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது