புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் (Govt Approves New Crop Insurance Scheme)
புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு (New Crop Insurance Scheme or PMFBY-Pradhan Mantri Fasal Bima Yojana) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது .
விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் சுமை குறைக்கப்படுவதோடு, முழுமையான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்கும் வகையிலும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் (New Crop Insurance Scheme) வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் (NAIS-National Agricultural Insurance Scheme) மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் (Modified NAIS) சில உள்ளார்ந்த குறைபாடுகள் இருந்ததால், இந்த காப்பீட்டு திட்டங்களுக்கு மாற்றாக புதிய பயிர் காப்பீட்டுத் காப்பீட்டு திட்டத்திற்கு (New Crop Insurance Scheme) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராபிப் பருவத்தில் (rabi) பயிரிடப்படும் உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணை வித்துப் பயிர்களுக்கு 1.5 சதவிகித பிரிமியமும் மற்றும் காரீப் பருவத்தில் (kharif season) பயிரிடப்படும் உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணை வித்துப் பயிர்களுக்கு 2 சதவிகித பிரிமியமும், தோட்டக் கலைப் பயிர்கள் மற்றும் பருத்திக்கு 5 சதவிகித பிரிமியமும் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனமும் (Agriculture Insurance Company of India Ltd), தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும். பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பயிர் சேத காப்பீடு நிவாரணமாக குறைந்தபட்சம் 25% விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.
PLEASE READ ALSO : உணவுப்பொருட்களை பதப்படுத்த உதவும் SOLAR DRYER தொழில்நுட்பம்