வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் Live Chat, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளிக்க உதவும் Live Chat

Share & Like

live chat  தொழிலின் வளர்ச்சிக்கு வலைத்தளம் (Website) மிகவும் உதவுகிறது. இன்று வலைதளத்தின் மூலம் பல தொழில்கள் நடைப்பெற்று வருகின்றன. நிறுவனங்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் அறிய வலைத்தளம் உதவுகிறது. இன்றைய இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நிறுவனங்களை வலைதளத்தின் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். ஆகவே நிறுவனங்கள் தங்களின் வலைத்தளத்தை (Website) மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவது அவசியமாகும். நிறுவனங்களின் வலைத்தளத்திற்கு (Website) வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக LIVE CHAT என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தோன்றும் ஐயம், கேள்விகள், சந்தேகங்கள் போன்றவற்றை LIVE CHAT மூலம் நேரடியாக தீர்க்க முடியும். LIVE CHAT என்பது நேரடி உரையாடல் ஆகும். பல நிறுவனங்கள் LIVE CHAT வசதியை தங்கள் வலைதளத்தில் (Website) பயன்படுத்துகின்றன.

LIVE CHAT வசதியை வலைதளத்தில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் (More Advantages) உள்ளன.

  • பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள், நிறுவனப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து கொள்வதையே விரும்புகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க LIVE CHAT வசதி உதவுகிறது.
  • பொருட்களின் விலையை வாடிக்கையாளர்கள் உரையாடல் மூலம் அறிய உதவுகிறது.
  • Instant Leads : பார்வையாளர்கள் LIVE CHAT-ன் மூலம் தங்களுக்கு தேவையான விவரங்களை உடனடியாக பெறுவதால், விரைவான விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது.
  • Customer Feedback : வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனத்தைப் பற்றிய கருத்துக்களை (Feedback) LIVE CHAT-ன் மூலம் பெறலாம்.
  • Develop deeper customer relationships: நேரடி உரையாடலின் மூலம் வாடிக்கையாளர்களிடம் ஆழமான உறவை வளர்க்கலாம்.
  • Better First Impression: பார்வையாளர்களுக்கு (Visitors) நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றி அதிக தகவல்களை உரையாடல் மூலம் அளிப்பதால் அவர்களை வாடிக்கையாளராக மாற்ற முடியும்.

LIVE CHAT Software-ஐ நிறுவும் முறை:

  LIVE CHAT-ஐ வலைதளத்தில் நிறுவுவதற்கு எவ்வித programming அறிவும் தேவையில்லை. LIVE CHAT Software-ஐ பல நிறுவனங்கள் வழங்குகின்றன. நிறுவனத்தின் வலைத்தளத்தை வடிவமைத்த நிறுவனமே LIVE CHAT Software-ஐ நிறுவிக் கொடுக்கின்றன.

LIVE CHAT Software- ஐ சேவை வழங்கும் நிறுவனங்கள்:

   LIVE CHAT Software-ஐ சேவையை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. LIVE CHAT வசதியை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்து நிறுவனத்தைப் பொறுத்து கட்டணம் மாறுப்படும்.

iFlyChat
LiveChat
Zopim
NETOP
Live2Support 

போன்ற பல நிறுவனங்கள் Live Chat சேவையை வழங்குகின்றன.

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons