அலங்கார வடிவமைப்புள்ள உடைகள் மற்றும் நகைகளை விற்கும் Jaypore ஆன்லைன் சில்லறை கடை Aavishkaar முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 30 கோடி ரூபாய் முதலீடாக பெற்றது
அலங்கார வடிவமைப்புள்ள உடைகள் மற்றும் நகைகளை விற்கும் Jaypore ஆன்லைன் சில்லறை கடை Aavishkaar முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 30 கோடி ரூபாய் முதலீடாக பெற்றது. Jaypore நிறுவனம் உடைகள், நகைகள் , வீட்டு அலங்கார பொருட்கள், அலங்கார திரை சீலைகள் , அலங்கார உடைகள் மற்றும் கைவினை உள்ள ஆடைகள் போன்றவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. இந்த 30 கோடி ரூபாய் முதலீட்டுத் தொகை இரு தவணையாக Jaypore நிறுவனத்திற்கு வழங்கப்படும் Aavishkaar முதலீட்டு நிறுவனம் (Venture Capital Firm) என தெரிவித்துள்ளது.
Jaypore விற்பனை செய்யும் ஆடைகள் புதுமையான வடிவமைப்புடன் கைதேர்ந்த கைவினைஞர்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த 30 கோடி முதலீட்டை கொண்டு தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பிராண்டு உருவாக்கம் மற்றும் அதன் குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்போவதாக Jaypore கூரியுள்ளது.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
2012-ஆம் ஆண்டு புனீத் சாவ்லா மற்றும் ஷில்பா சர்மா என்பவர்களால் டெல்லியில் தொடங்கப்பட்டது. இதன் ஆண்டராய்டு மற்றும் ios அப்ளிகேசன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 200-400 தினசரி பரிவர்த்தனைகள் Jaypore நிறுவனத்தில் நடைபெறுகிறது. வரும் மார்ச்,2017-க்குள் மொத்த வர்த்தக விற்பனையை 30 கோடி உயர்த்த திட்டமிட்டுள்ளது.