ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகள் 24% குறைந்தது
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகள் 24% ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுகளில் குறைந்தது. டிசம்பர் மாத காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருட முதல் மூன்று மாதங்களில் செய்த முதலீடு 24% குறைந்துள்ளதாக KPMG மற்றும் CB Insights நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட முதல் மூன்று மாதங்களில் முதலீட்டாளர்கள் (investor) $1.15 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு (investment) செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்கும் BigBasket $150 மில்லியன் டாலர்களையும், ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் Shopclues நிறுவனம் $150 மில்லியன் டாலர்களையும், Snapdeal $50 மில்லியன் டாலர்களையும் முதலீடாக இந்த வருட முதல் காலாண்டில் பெற்றுள்ளன.
முதலீட்டாளர்களிடம் உள்ள தயக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முதலீடுகளை அதிகமாக மதிப்பீடு செய்தல் போன்றவற்றால் முதலீடுகள் சரிந்துள்ளதாக KPMG மற்றும் CB Insights நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் வளர்ச்சி குறைவு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்புகள் போன்ற காரணங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 2014 ஆம் ஆண்டு முதல் $9 பில்லியன் டாலர் வரை செய்த முதலீட்டை கடந்த இறுதியில் முதலீட்டாளர்கள் திரும்ப பெற தொடங்கினர்.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்