இந்தியா 2020-ஆம் ஆண்டில் 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை கொண்டிருக்கும்
இந்தியா 2020-ஆம் ஆண்டில் 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஸ்டார்ட் அப் (Startup) (தொடக்க நிறுவனங்கள்) நிறுவனங்கள் வேகமாக அதிகரித்துவரும் நாடாக இந்தியா உள்ளது. தொழில்முனைவோரை முன்னேற்றும் வகையில் Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
2014-ஆம் ஆண்டு 3100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடக்கப்பட்டது. இதை வைத்து 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை இந்தியா 2020-ஆம் ஆண்டில் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் முதலீட்டு நிறுவனங்கள் (Venture capital) ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 14,850 கோடி ரூபாயை முதலீடு (invested) செய்தன. அதுவே 2015-ஆம் ஆண்டு ஜூன் வரை 15,600 கோடி ரூபாயை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு (invested) செய்திருந்தன.