இந்திய கைத்தறி பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக இணையதளத்தை ஜவுளி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்திய கைத்தறி பொருட்களின் (handloom products) விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக இணையதளத்தை http://www.indiahandloombrand.gov.in/ ஜவுளி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த இணையத்தளத்தின் மூலம் நுகர்வோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும், பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்களை கண்டுபிடிப்பதற்கும், இந்திய கைத்தறிகள் விற்கப்படும் இ-கடைகள்(e-stores) மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை (retail outlets) கண்டுபிடிப்பதற்கும் இந்த இணையத்தளம் பயன்படும்.
India Handloom Brand விற்பனையாளர்களை சரிபார்த்தல் மற்றும் கைத்தறி பொருட்களின் தரத்தினை சோதனை செய்வதற்கும் உதவுகிறது.
கைத்தறிப் பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், தரத்தினை உயர்த்துதல், சமகாலத்திற்கு தகுந்தாற்ப் போல் வடிவமைப்புகளை மேம்படுத்துதல், பூஜ்யம் குறைபாடு (zero defect) மற்றும் சுற்றுச்சூழல் மீதான பூஜ்யம் பாதிப்பு (zero effect on environment) போன்றவற்றை நோக்கமாக கொண்டு இந்திய ஜவுளித் துறை அமைச்சகம் செயல்படுகிறது.
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது