நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்
நமக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறபோது, நாம் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது ஏற்கனவே பல பேர் செய்து கொண்டிருக்கும் தொழிலையோ, நமது ஊரில் ஏற்கனவே உள்ள தொழில்களை ஒத்த தொழிலையோ தான். நமக்கு அதை தாண்டி யோசனைகளும், எண்ணங்களும் தோன்றாது.
புதுமையான தொழில்களை பற்றி யோசிக்கவும், அதை தேர்ந்தெடுத்து செய்யவும் நமக்கு பொறுமையும், அதற்கான மனமும் நமக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. நம்மை பொருத்தவரையில் ஏற்கனவே ஒருவர் செய்து கொண்டிருக்கும் தொழிலை நாமும் செய்தால் எந்தவித சிரமமும் இன்றி எளிதில் வெற்றிப்பெற்றுவிடலாம்.
நாம் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனை சம்மந்தமான பொருட்களை விற்று ஒரு நிறுவனம் வெற்றிப் பெற்றிருக்கிறது. அது Heads Up For Tails(HUFT) என்ற நிறுவனம்தான். இந்நிறுவனம் நாய்களுக்கான உணவுகள், படுக்கைகள், தோல் வார்கள், படுக்கைகள், உடைகள், நாய்களுக்கான ஷாம்பு, சோப்பு, சீப்பு, பிரஸ்கள், துண்டுகள், நாய்கள் விளையாடுவதற்கான பொம்மைகள், நாய்கள் உண்ணுவதற்கு பயன்படும் கிண்ணங்கள் மற்றும் நாய், பூனை சம்மந்தமான பல பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று வருகிறது.
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது
Heads Up For Tails(HUFT) இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நாய் மற்றும் பூனை சம்மந்தமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிறுவனம் தொடங்கபட்டதிலிருந்து ஒவ்வொரு வருடமும் 50 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் பல்வேறு நிதி மேலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலரை ($1 million) முதலீட்டு நிதியாக பெற்றுள்ளது.
Heads Up For Tails(HUFT) 2008 ஆம் ஆண்டு பல வித ஆராய்ச்சி மற்றும் செல்ல பிராணிகளுக்கான தொழில் மற்றும் சந்தையை புரிந்து கொண்ட பின்னர் ராஷி சனொன் நரங் (Rashi Sanon Narang) என்பவரால் புது தில்லியில் தொடங்கப்பட்டது. இவர் ஒரு பெண் தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு நாய் என்றால் ரொம்ப பிடிக்கும். இவர் சாரா (Sara) என்ற நாயை வளர்த்து வந்தார். அதற்கான உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்கு மிகவும் அலையவேண்டி இருந்தது. அதற்கான தரமும் குறைவாக இருந்தது. இவருக்கு நாய்கள் மீது மிகுந்த பிரியம் இருந்ததாலும், அதற்கான பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிரமத்தைப் போக்கவும் நாய் மற்றும் பூனை சம்மந்தமான பொருட்களை விற்கும் நிறுவனத்தை தொடங்கினார்.
PLAEASE READ ALSO : DesignBids நிறுவனம் Indian Angel Network-யிடமிருந்து முதலீட்டு நிதியை பெற்றுள்ளது