சிலிக்கான் வேலியில் உலகளாவிய தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு : Global Tamil Entrepreneurs Network 2017
அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் (ATEA – American Tamil Entrepreneurs Association), உலகளாவிய தமிழ் தொழில் முனைவோருக்கான சந்திப்பு (GTEN -Global Tamil Entrepreneurs Network) ஒன்றை வருகிற மே 4ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடைபெறவுள்ளது.
இலாப நோக்கமற்ற ATEA சங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் பல நிகழ்ச்சிகளையும் (entrepreneurship education programs, meetups, conferences, startup pitch sessions, networking events, and mentorship programs) மற்றும் பல செயல்களையும் நடத்திவருகிறது.
அதன் ஒரு அங்கமாக தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் உலகளவில் சுய தொழில் செய்து வெற்றி பெற்ற தமிழர்கள், முதலீட்டாளர்கள் (investors), துறையில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள், புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த GTEN SPRING MEET சந்திப்பில், வெற்றிபெற்ற தொழில்முனைவோரின் உரைகள், குழு விவாதங்கள் (Panel discussions), கலந்துரையாடல்கள், தொழில் வழிகாட்டிகளுடன் (Mentor Connect) தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு என பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. எல்லை கடந்த தொழில் முன்னெடுப்புகள் குறித்து தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர் பேசவுள்ளனர்.
தொழில் முனைவோர்கள (entrepreneur development), இளைஞர்கள், பெண்களை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல், தமிழ் தொழில் முனைவோர்களை முதலீட்டார்கள், வழிகாட்டிகள், நிபுணர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தல், என அமெரிக்க மற்றும் இந்திய தமிழ் சமூகத்தில் இருப்பவர்களை உலகின் மற்ற இடங்களில் இருக்கும் சர்வதேச தொழில் முனைவோருடன் இணைப்பதே அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்தின் நோக்கமாகும்.
மேலும் தகவல்களுக்கு: www.ateausa.org, www.ateausa.org/gtensprin
Register For : GTEN SPRING MEET – MAY 4, 2017
Please Read This Article: