Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

Share & Like
Startup India, Standup India ("ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா")
                                    IMAGE CREDIT : NDTV

தொழில்முனைவோரை முன்னேற்றும் வகையில் Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ல் டெல்லில் தொடங்கி வைத்தார்.

Startup India, Standup India (ஸ்டார்ட்அப் இந்தியா) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்து அது குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். Startup India, Standup India (ஸ்டார்ட்அப் இந்தியா) திட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும், வரி விலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  


 

Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

 

  • தொழில் துவங்குவதற்கு உதவுவதற்காக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. 
  • புதிய நிறுவனங்களின் செயல்பாடுகளில் அரசின் தலையீடு குறைவாக இருக்கும். 
  • Credit guarantee fund for startups:  கடன் உதவி மூலம் தொழில்முனைவை ஊக்குவிக்க தேசிய கடன் உத்தரவாத  நிறுவனம் (National Credit Guarantee Trust Company (NCGTC)) அல்லது சிட்பி (SIDBI-Small Industries Development Bank of India) மூலம் கடன் உத்தரவாத வழிமுறை அமல் செய்யப்படும்.  அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • ஸ்டார்ட்அப் தொழில்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி கிடையாது.
  • மூலதன ஆதாயம் மீதான வரியை செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்முனைவோர் தொழில் தொடங்கவும் அதில் இருந்து எளிமையாக வெளியேறும் வகையில் திவால் சட்டத்தில் புதிய பிரிவு இயற்றப்படும். 
  • புதிய தொழில் நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்கு எந்தவித சோதனையும் கிடையாது. 
  • புதுமைகளுக்கு உத்வேகம் அளிக்கவும், திறமையான தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் Atal Innovation Mission(AIM)  (அடல் இன்னோவேஷன் மிஷன்) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • தொழில்முனைவோர் அவர்களின் சுய சான்றுடன் விண்ணப்பத்தை ஒரே நாளில் பதிவு செய்யலாம். 
  • காப்புரிமை பெறுவதிலும் விதிகள் தளர்த்தப்படுகின்றன. குறிப்பாக, காப்புரிமை பட்டயத்தை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்படுகின்றன.
  • தனியார் அரசாங்க கூட்டு முயற்சியில் புதிய இன்குபேட்டார் (new incubators) , கண்டுபிடிப்பு மையம் (innovation centres) போன்றவை தேசிய கல்வி நிறுவனங்களில் (National Institutes) உருவாக்கப்படும். 
  • பொது கொள்முதல் விதிமுறைகளில் (Norms of public procurement) தளர்வு.
  • பெண் தொழில்முனைவோருக்கு சிறப்பு திட்டங்கள். 
  • தொடக்க நிறுவனர்கள் எளிதாக பதிவு செய்வதற்காக உதவ Mobile application, வலைத்தளம் (online portal) போன்றவை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் தொடங்கப்படும். 
  • தலா 100 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய தொழில்நுட்பக் கழக (Indian Institute of Technology) வளாகத்தில்  6 புதிய ஆராய்ச்சி பூங்காக்களும் (New research parks), இந்திய அறிவியல் கழக (Indian Institute of Science) வளாகத்தில்  1 புதிய ஆராய்ச்சி பூங்காக்களும் (New research parks) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Startup India, Standup India ("ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா")
                            IMAGE CREDIT : NDTV

அடுத்த பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற வரிச் சூழலுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும்.

இந்த Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டம் வாயிலாக புதிதாக தொழில் துவங்க வரும் இளைஞர்களுக்கு கடன் வசதிகள், தொழில் முனைவதற்கான உதவிகளும் வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


PLEASE READ ALSO : HYPERCAT கூட்டமைப்பு தகவல் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இன்குபேட்டரை ஹைதராபாதில் தொடங்கியுள்ளது (HYPERCAT Opens Incubator for Indian Tech Start-Ups in Hyderabad)


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons