ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்ட முதலீட்டு நிதியை வழங்கும் Entrepreneurship & Venture Capital (EVC) முதலீட்டு நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த Entrepreneurship & Venture Capital (EVC) முதலீட்டு நிறுவனம் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்ட முதலீட்டு நிதியை (funding) வழங்குகிறது. Entrepreneurship & Venture Capital (EVC) $.5 கோடி டாலர் நிதியை ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
EVC முதலீடு செய்யும் துறைகள்
Entrepreneurship & Venture Capital (EVC) முதலீட்டு நிறுவனம் முக்கியமாக கல்வி துறையில் (education sectors) உள்ள தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய கவனம் செலுத்துகிறது. மேலும் விளம்பர தொழில்நுட்பம் (ad-tech), இ-காமர்ஸ் (eCommerce), கேம்மிங் (gaming segments), Internet of Things (IoT), நிறுவன மென்பொருள் (enterprise software), இணையத்தளம் மற்றும் மொபைல் அப்ளிகேசன் (mobile app) தொழில்நுட்ப துறையில் உள்ள தொடக்க நிறுவனங்களிலும் முதலீடு (investment) செய்கிறது.
முதலீடு செய்யும் தொகை
தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளரான அஞ்சலி ஜெயின் Entrepreneurship & Venture Capital (EVC) நிறுவனத்தை வழிநடத்துகிறார். $1 இலட்சம் முதல் $50 இலட்சம் டாலர் வரை ஒவ்வொரு தொடக்க நிறுவனங்களிலும் முதலீடு செய்கிறது. குர்கானில் உள்ள EVC Accelerator அலுவலகத்தில் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு $5 ஆயிரம் முதல் $50 இலட்சம் டாலர் வரை முதலீட்டு நிதியை அளிக்கிறது.
எந்த வகையான நிறுவனங்களில் EVC முதலீடு செய்கிறது?
- குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பை (minimum viable product (MPV)) கொண்ட நிறுவனங்கள்,
- வருவாய் (revenue) உருவாக்கும் நிறுவனங்கள்,
- உலக சந்தையை (global market) இலக்காக கொண்ட நிறுவனம்,
- செலவும்,வருமானமும் சமன்பாடு (breakeven) அடைத்திருக்கும் நிறுவனங்கள்,
- துறையில் நிபுணத்துவம் உள்ள தொழில்முனைவோர்களால் (domain-expert entrepreneurs) தொடங்கப்பட்ட நிறுவனங்கள்,
- பேரார்வம் உள்ள தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
EVC எந்த வகையில் நிறுவன வெற்றிக்கு உதவுகிறது?
தயாரிப்பு மேம்பாடு (product development), விற்பனை, மார்க்கெடிங் மற்றும் நிறுவன நடவடிக்கைகள் (operations) ஆகியவற்றில் முதலீடு (invest) செய்து நிறுவன வளர்ச்சிக்கு உதவுகிறது. தொழில்நுட்பம் மற்றும் தொழில் அனுபவம் உள்ள வல்லுனர்களை கொண்டு வழிகாட்டுகிறது. நிறுவன செயல்பாடுகளின் செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகப்படுத்த உதவுதல், வருமானத்தை அதிகப்படுத்த கல்வித்துறையில் அனுபவம் உள்ள வல்லுனர்களை கொண்டு வழிகாட்டுகிறது.
முதலீட்டுத் தொகையை பெற விண்ணபிப்பது எப்படி?
முதலீட்டுத் தொகை தேவைப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் Entrepreneurship & Venture Capital (EVC) விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அனுப்பவேண்டும். மூன்று வாரத்திற்குள் முதலீட்டிற்க்கான பதில்களை (EVC) அளிக்கும்.
http://www.edutechvc.com/contact.html