மின்னணு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் Electronics Development Fund (EDF)
புதுமையான மின்னணு சாதனங்கள் சார்ந்த கண்டுபிடிப்பு, மின்னணு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு நிதி பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்னணு சாதனங்கள் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு உதவ மத்திய அரசு Electronics Development Fund (EDF) (‘மின்னணு வளர்ச்சி நிதியம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோக்கம்
மத்திய அரசு “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக, எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தியாளர்கள் துறையை மேம்படுத்தி 2020 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதனங்கள் இறக்குமதி இல்லா “நிகர ஜீரோ இறக்குமதி” (“Net Zero Imports”) நிலையை அடையும் நோக்கத்தோடு Electronics Development Fund (EDF) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியம் எலக்ட்ரானிக்ஸ், நானோ எலக்ட்ரானிக்ஸ் (nano-electronics) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமையானவற்றை வடிவமைப்போருக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) செய்பவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை (Funding) வழங்கும்.
சேவைகள்
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, நிதியுதவி (Funding) செய்வதுடன், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளையும் Electronics Development Fund (EDF) நிதியம் ஏற்படுத்தி தரும்.
மேலும், கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள், கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் (Electronics System Design) போன்றவற்றுக்கு காப்புரிமை (Patent) பெறுவதற்கும் துணை புரிகிறது.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra
Electronics Development Fund (EDF) கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, முதலீட்டு நிறுவனங்கள் (Venture Capital) மூலமாகவே அனைத்து நிதி உதவிகளையும் (Funding) வழங்குகிறது. முதலீட்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கையை பரிசீலித்து, அதற்கேற்ப நிதியுதவி வழங்கப்படுகிறது.
முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமின்றி, ஒருவர் அளிக்கும் திட்ட அறிக்கையின் தகுதியை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நேரடியாகவும் நிதியுதவி Electronics Development Fund (EDF) நிதியம் செய்யும்.
நிதி முதலீட்டை பெற
Electronics Development Fund (EDF) நிதியத்தின் நிதி மேலாளராக கனரா வங்கியின் CANBANK Venture Capital Funds Ltd. (CVCFL) முதலீட்டு நிறுவனம் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. புதுமையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்ய விரும்பும் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி முதலீட்டை பெற Electronics Development Fund (EDF) நிதியத்தை தொடர்பு கொள்ளலாம் மற்றும் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையும் (Department of Electronics and IT) தொடர்பு கொள்ளலாம்.
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்ய, முதலீடு மற்றும் அரசின் உதவிகளை பெற மத்திய அரசின் Startup India Portal மற்றும் Mobile App