நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் EduBridge 17.1 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது

Share & Like

நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் மும்பையைச் சேர்ந்த EduBridge 17.1 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது. EduBridge ஸ்டார்ட் அப் நிறுவனம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வேலையில்லா இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், நிறுவன உழியர்கள் போன்றவர்களுக்கு பல வகையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கிறது. 17.1 கோடி ரூபாய் முதலீட்டை Insitor Impact Asia Fund மற்றும் Acumen Fund முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது .ஏற்கனவே Acumen Fund முதலீட்டு நிறுவனம் EduBridge-ல் முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

EDUBRIDGE
    Img Credit : ACUMEN.ORG

 

வேலை பெறுவதற்கும்  மற்றும் தங்களை மேம்படுத்தி கொள்வதற்கு தேவையான மென் திறன்கள் மேம்பாடு (Soft Skills), ஆளுமை திறன்கள் (personality Skills),  நடத்தை திறன்கள் (Behavioral Skills), தொடர்பு திறன்கள் (Communication Skills), தலைமைத்துவ திறன் (Leadership Skills), மன அழுத்தம் மேலாண்மை (Stress Management) போன்ற பயிற்சிகளை EduBridge ஸ்டார்ட் அப் அளிக்கிறது.

EduBridge ஸ்டார்ட் அப் நிறுவனம் TeamBridge, EmployBridge, SkillsBridge மற்றும்  Projects போன்ற நான்கு வகையான சேவைகளை அளிக்கிறது. TeamBridge சேவை வேலையற்ற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்கள் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு உதவுவதற்காவும், EmployBridge சேவை கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும். SkillsBridge சேவை நிறுவன ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், Projects சேவை அரசு சார்ந்த பயிற்சி திட்டங்களை இணைந்து செயல்படுத்தவும் என்ற நான்கு வகையான சேவைகளை வகைபடுத்தியுள்ளது. 


PLEASE READ ALSO: வீட்டு வேலைகள் தொடர்பான சேவை வழங்குபவர்களை இணைக்கும் LocalRamu அப்ளிகேஷன்


இந்த 17.1 கோடி ரூபாய் முதலீடை குஜராத், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த பயன்படுத்த போவதாக கூரியுள்ளது.

EduBridge 2009-ஆம் ஆண்டு IIM முன்னாள் மாணவரான கிரிஷ் சிங்கானியா என்பவரால் தொடங்கப்பட்டது.EduBridge 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்க ளுடன் கூட்டுசேர்ந்து பயிற்சிகளை அளித்து வருகிறது.  அதன் மாணவர்களுக்கு 67% வேலை வாய்ப்பிணை உருவாக்கித் தருகிறது. 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons