தொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க Content Marketing ஐ பயன்படுத்துங்கள்
உங்கள் தொழில் சிறியதோ, பெரியதோ தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை (technology) பின்பற்றியே ஆகவேண்டும். மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் (strategy) பயன்படுத்தப்படுகிறது.
Search engine optimization (SEO), Search engine marketing (SEM), Social media marketing, Content marketing, Influencer marketing, Content automation, Campaign marketing, Social media optimization, E-mail direct marketing, Display advertising, E–books, E-commerce marketing, Optical disks, Games மற்றும் பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகள் மூலம் பிராண்டை (brand) சந்தைப்படுத்தலாம்.
தொழில் மற்றும் நிறுவனத்தைப் பற்றி, பிராண்டு பற்றி, தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி விளக்க, வாடிக்கையாளர்களை கவர, ஈர்க்க தெளிவாக மற்றும் புரிந்துகொள்ளும்படியான வரையறுக்கப்படும் உள்ளடங்கள், பத்திகள், விளக்கங்கள், வார்த்தைகள் இவையே Content எனப்படும்.
உதாரணத்திற்கு நாம் ஒரு திரைப்படம் பார்க்கிறோம். அந்த படத்தின் கதை, இயக்கம், நடிப்பு, வசனம், இசை போன்ற பல நம்மை கவரும் படியாக இருக்கும்போது மட்டும்தான் அந்த திரைப்படம் நமக்கு பிடிக்கும். அந்த படத்தின் வசனம் தான் Content போன்றது. வசனங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அந்த அளவிற்கு திரைப்படத்தின் வெற்றியும் அமையும்.
தொழிலும் கிட்டத்தட்ட அதேபோல் தான் வாடிக்கையாளர்களை கவர, இழுக்க, தயாரிப்பு மற்றும் சேவையை வாங்க வைக்க தொழிலுக்கு பயன்படுத்தப்படும் Content உதவுகிறது.
தொழிலை சார்ந்த Content ஐ இணையத்தளம் (website), Blog, சமூக வலைத்தளம் (social Media), இமெயில், வீடியோ, ஆன்லைன் சேனல், ஆஃப்லைன் சேனல், அச்சிடப்பட்ட வடிவம் போன்ற பலவற்றில் பயன்படுத்துவோம். இந்த Content ஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம்.
Content Marketing என்பது வாடிக்கையாளர்களை ஈர்க்க, கவர, பிராண்டை வாங்க வைக்க பயன்படுத்தப்படும் பொருத்தமான, தெளிவான, மதிப்புள்ள உள்ளடக்கத்தை (content) உருவாக்குதல் மற்றும் பகிர்தல் ஆகும். இது ஒரு வகையான மார்க்கெட்டிங் மற்றும் வணிக செயல்முறை ஆகும். மார்கெட்டிங் சிறந்த உள்ளடக்கம் (content) இல்லாமல் சாத்தியமில்லை.
Content Marketing வகைகள்
தயாரிப்பு மற்றும் சேவையை பற்றிய Content ஐ பல வகைகளில் மார்க்கெட்டிங் செய்யலாம். இந்த Content Marketing நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாற்றவும், விற்பனையை அதிகப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.
இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது, Content ஐ சமூக வலைத்தகளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது,
வாடிக்கையாளர்களுக்கு மற்றும் தொடர்புடையவர்களை Email Newsletters அனுப்புவது, Ebooks மற்றும் Podcasts வெளியிடுவது, நிறுவனம் சார்ந்த செய்தியை பிராண்டை பிரபலப்படுத்தும் விதத்தில் Newsjacking செய்வது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்.
தொழில் சிறியதோ, பெரியதோ அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திவரும் காலத்தில் அவர்களை சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொழிலின் வளர்ச்சிக்கு உதவும்.
Please Read This Article:
தொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com