சமூக வலைத்தளங்களின் மூலம் முன்னாள் மாணவர்களை (Alumni Networks) இணைக்கும் AlmaConnect முதலீட்டை பெற்றது
சமூக வலைத்தளங்களின் மூலம் முன்னாள் மாணவர்களை (Alumni Networks) இணைக்கும் AlmaConnect ஸ்டார்ட் அப் முதலீட்டு நிதியை பெற்றுள்ளது. AlmaConnectt பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நெட்வொர்க்களை (alumni networks) உருவாக்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் முன்னாள் மாணவர்களை தொடர்புக் கொள்வதற்கும், முன்னாள் மாணவர்கள் மூலம் தங்களுக்கு எதாவது உதவி தேவைப்படின் அவர்களை தொடர்புக் கொள்வதற்கும் AlmaConnect பயன்படுகிறது. முன்னாள் மாணவர்களின் நெட்வொர்க்களை சமூக வலைத்தளங்களான Facebook, LinkedIn மூலம் உருவாக்குகிறது. விருப்பமுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் இதில் இணைந்து பயன்பெறலாம்.

Manipal Global Education, தலைவர் மற்றும் இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பய், Aspiring Minds துணை நிறுவனர் வருண் அகர்வால் போன்றோர்கள் AlmaConnect ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். IIM அகமதாபாதில் உள்ள Centre for Innovation Incubation and Entrepreneurship (CIIE) மற்றும் 91Springboard இன்குபேட்டார் போன்றவை AlmaConnect ஸ்டார்ட் அப் மேம்பாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ஏற்கனவே CIIE–IIM அகமதாபாத் மற்றும் சில ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து $2.5 இலட்சம் டாலர் முதலீட்டு நிதியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
PLEASE READ ALSO: நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்
2000 மேற்பட்ட முன்னாள் மாணவர்களின் நெட்வொர்க் AlmaConnect–ல் இயங்குகிறது. 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்களது முன்னாள் மாணவர்களை இணைக்க AlmaConnect–ஐ அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகிறது.

ஸ்வப்னில் காண்டெல்வால் (Swapnil Khandelwal) மற்றும் ரூபிஸ் குப்தா (Rubish Gupta) என்பவர்களால் 2009-ஆம் ஆண்டு AlmaConnect டெல்லியில் தொடங்கப்பட்டது.
இந்த முதலீட்டு தொகையை வைத்து 6 மாதத்தில் இப்போது பதிவுசெய்திருக்கும் 2.5 இலட்சம் பயனர்களிலிருந்து 10 இலட்சம் பயனர்களாக அதிகப்படுத்த போவதாகவும், எதிர்காலத்தில் மேலும் முதலீட்டு நிதியை அதிகப்படுத்த நிறுவனத்தை தயார் படுத்தப்போவதாகவும் AlmaConnect தெரிவித்துள்ளது.