தொழில்முனைவோர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் CCAvenue நிறுவனத்தின் CCAvenue Finance
CCAvenue இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் கேட்வே (Payment Gateway) நிறுவனமாகும். ஆன்லைன் இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பண பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் சேவைகளை CCAvenue வழங்கிவருகிறது.
CCAvenue நிறுவனம் தொழில்முனைவோர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய CCAvenue Merchant Finance திட்டத்தை தொடங்கியுள்ளது.
CCAvenue Merchant Finance ஆன்லைன் இணையதளங்களை நடத்தும் தொழில்முனைவோர்களின் நிதி தேவைகளுக்கும், பண புழக்கத்திற்கும் தேவையான கடன்களை வழங்குகிறது. இதற்காக LENDINGKART நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது.
PLEASE READ ALSO: இ-காமர்ஸ் தளங்களில் விற்கும் விற்பனையாளர்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது e-Smart SME e-Commerce Loan
CCAvenue Finance எந்த வித பிணையமும் இல்லாத, விரைவான கடன்களை தொழில்முனைவோர்களுக்கு வழங்குகிறது.