சிக்கல்களும் நமக்கு வாய்ப்புகளே !
இந்த உலகத்தில் பல சிக்கல்களும் உருவாகி கொண்டே இருக்கின்றன. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளும் தேவைப்பட்டு கொண்டே இருக்கின்றன. அந்த மற்றும் சிக்கல்கள்தான் நம் தொழில் வாய்ப்புகள் , அதன் தீர்வுகள் தான் நம் தொழில்கள் .
அந்த மூன்று நண்பர்கள் தீபாவளிக்கு விடுமுறைக்கு வீடு செல்ல ஆயத்தமாயினர். அவர்கள் பெங்களூர் போக்குவரத்து நெருக்கடியை தாண்டி பேருந்து நிலையம் வருவதற்குள் பேருந்து டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது . இதனால் அவர்கள் வீடு செல்ல முடியவில்லை . இந்த சிக்கலை தீர்க்க தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் . அந்த தீர்வுதான் ஆன்லையனில் டிக்கெட் பதிவு செய்ய உதவும் RedBus.Com என்ற இணையதளம்.
நமக்கு தேவையான தொழில் ஐடியாக்களை நம் சொந்த அனுபவத்திலிருந்தே பெறலாம். நம்மை நிலைகுலைய வைத்த பிரச்சனைகள், நமது வாய்ப்புகளை தவற விட காரணமாக இருந்த சிக்கல்கள்,அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் இதிலிருந்தும் தொழில் ஐடியாக்கள் பிறக்கின்றன.
PLEASE READ ALSO: தொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்
மின்வெட்டு பிரச்னையை தீர்க்க உதவும் சூரிய ஒளிகலன்கள் (Solar Panel & Battery) போன்றவை சிக்கல்களின் தீர்வுகளே மற்றும் Online Flight & Bus TicketBooking, Online purchasing, Matrimonial Websites இவை போன்றவை எல்லாம் பல சிக்கல்களின் தீர்வுகளே.