பலூன்கள் மூலம் இணையதள சேவையை அளிக்கும் GOOGLE’S PROJECT LOON TECHNOLOGY
கூகுள் நிறுவனம் (GOOGLE) இணையதள சேவையை எல்லா பகுதிகளுக்கும் அளிப்பதற்காக ப்ராஜெக்ட் லூன் ( PROJECT LOON) என்ற தொழில்நுட்ப திட்டத்தை கண்டுபிடித்துள்ளது.
பலூன்கள் (Balloon) மூலமாக கம்பியில்லா இணைய வசதியை (Wireless Internet)-ஐ எல்லா பகுதிகளுக்கும் வழங்குவதே PROJECT LOON (ப்ராஜெக்ட் லூன்) திட்டத்தின் நோக்கமாகும்.
ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) தொழில்நுட்பத்தில் காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் (BALLOON) தரையிலிருந்து 20 கிலோமீட்டர் உயரத்திலுள்ள உள்ள ஸ்ட்ரோஸ்பியர்(Stratosphere) அடுக்கில் நிலைநிறுத்தப்படும். ஸ்ட்ரோஸ்பியர் (Stratosphere) அடுக்கில் காற்றின் வேகமும் (low wind speeds), கொந்தளிப்பும் (Minimal turbulence) குறைவாக இருக்கும். ஒவ்வொரு பலூனும் 40 தொலைவிற்கு இணையதள வசதியை அளிக்கும். இந்த பலூனில் (Balloon) ஹீலியம் (Helium) அல்லது ஹைட்ரோஜன் (Hydrogen) அல்லது அடர்த்தி குறைந்த காற்று அடைக்கப்பட்டிருக்கும்.
பலூனில் உள்ள ஒரு பெட்டியில் மின்னணு சாதனங்கள் (electronic equipment) அமைந்திருக்கும். இந்த பெட்டியில் சர்கியூட் போர்டு (Circuit Boards), ரேடியோ ஆண்டனாக்கள் (Radio Antenna), இன்டர்நெட் ஆண்டனாக்கள் (Internet antennas), நெட்வொர்க்ஸ் (Ubiquiti Networks) , இந்த பலூன் சூரிய ஒளித்தகடுகள் (Solar Panels) மூலம் சூரிய ஒளி மின்சாரத்தை (Solar Power) பெறுகின்றன. சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து வைக்க மின்கலங்கள் (Batteries) இருக்கும். சூரிய ஒளித்தகடுகள்(Solar Panels) 100 Watts மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
பலூன்கள் எங்கே அமைந்துள்ளன என்பதை கண்டுப்பிடிப்பதற்கும், பலூன்களை நகர்த்துவதற்கும் மென்பொருள் அல்கோரிதம் (Software Algorithm) பயன்படுத்தப்படுகிறது.ஒரு பலூன்கள் இன்னொரு பலூன்களை தொடர்புகொள்வதற்கும், ஒரு பலூன் பூமியை தொடர்புகொள்வதற்கும் ரேடியோ ஆண்டனாக்கள் (Radio Antenna) பயன்படுகிறது. இணைய சமிக்கைகளை ரேடியோ ஆண்டனாக்கள் (Radio Antenna) மூலம் பூமிக்கு அனுப்புகின்றன.
PLEASE READ ALSO : இந்திய கிராமங்களுக்கு இணையதள வசதியை உருவாக்க வருகிறது GOOGLE-ன் PROJECT LOON திட்டம்
கூகிள் நிறுவனம் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து 2.4GHz மற்றும் 5.8GHz அலைவரிசையில் இணையதள சேவையை வழங்கும். ப்ராஜெக்ட் லூனின் (PROJECT LOON) ஒவ்வொரு பலூனும் 4ஜி (4G or LTE) இணைப்பை வழங்க முடியும். கூகுள் நிறுவனம் தொலைதொடர்பு நிறுவனங்களின் (Telecom companies) அலைக்கற்றையை (Share spectrum) பகிர்ந்துகொள்ளும். இதனால் மக்கள் தங்கள் தொலைபேசியிலிருந்து நேரடியாக இணைப்பை பெற முடியும்.
தொலை தொடர்பு நிறுவனங்களுடன் (Telecom Companies) கூட்டுசேர்ந்து இணையதள வசதியை வழங்கும். எனினும் இணையதள வசதிக்கான தொழில்நுட்பத்தை (Only Technology provider not the internet service provider) மட்டுமே வழங்கும். இணையதள சேவையை தொலை தொடர்பு நிறுவனங்கள்தான் (Telecom companies) வழங்கும்.
நியூஷ்லாந்து (New Zealand) முதலாவதாகவும், பிரேசில் (BRAZIL) இரண்டாவதாகவும் ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) திட்டத்தை பயன்படுத்திய நாடுகளாகும். ப்ராஜெக்ட் லூன் (PROJECT LOON) என்ற தொழிநுட்பத்தின் மூலம் அதிவேக கம்பியில்லா இணைய வசதியை (Wireless Internet)-ஐ எல்லா பகுதிகளுக்கும் பெற முடியும்.