ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp

Share & Like

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கும்போது சரியான சிறந்த சேவைகளை தரும் வங்கியை தேர்ந்தெடுப்பது அவசியம். பல நிதிச் சார்ந்த (Finance) விசயங்களில் வங்கிகளின் ஆலோசனைகள் தேவைப்படும். தொழில்முனைவோர்கள் வங்கியை தேர்ந்தெடுக்கும் முன் பலவற்றை ஆராய்ந்து முடிவு செய்வது அவசியம் ஆகும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அனைத்து வகையான வங்கித் தீர்வுகளை வழங்குவதற்காக HDFC வங்கியில் SmartUp சேவை உள்ளது. HDFC SmartUp பிரேத்தியேகமாக தொழில்முனைவோர்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

HDFC SmartUp

HDFC  வங்கி  SmartUp சேவையை மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் accelerator நிறுவனமான ‘Zone Startups India’ வுடன் இணைந்து செயல்படுத்துகிறது.

HDFC SmartUp ன் முக்கிய நன்மைகள்
  • ஸ்டார்ட் அப்களின் எல்லா வங்கித் சார்ந்த தேவைகளையும் SmartUp நிறைவேற்றும். வங்கி சேவைகள், கட்டணம் தீர்வுகள் (payment solutions), ஆலோசனை (advisory) மற்றும் அந்நிய செலாவணி சேவைகள் (forex services) போன்ற தொழில்முனைவோர்களின் தேவைகளை நிறைவேற்றும். 
  • குறைந்தபட்ச ஊழியர்கள் என்ற  எந்த அளவுகோல் இல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கணக்குகள் தொடங்கலாம் (employee accounts).
  • முதல் 6 மாதத்திற்கு  சராசரி மாத இருப்பு (Average Monthly Balance (AMB)) வைப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பின்னர் இது 1 வருடத்திற்கு விலக்கு அளிக்கப்படலாம்.
  • நிறுவனத்திற்கு HDFC யின் PayZapp பணபரிவர்த்தனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • வரிகள், ஒழுங்குமுறை, உடன்பாடுகள் போன்றவற்றிக்கு HDFC ஆலோசனையாளர்களை பரிந்துரைக்கும்.
  • ஹெச்டிஎப்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை காட்சிபடுத்தும் SmartBuy தளத்தில் ஸ்டார்ட் அப்கள் தங்களையும் காட்சி படுத்தலாம். 

PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்யும் SBI வங்கியின் SBI InCube பிரேத்தியேக கிளை


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons