தொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சி பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது
ஸ்டார்ட் அப் கனவுகளுடன் இருக்கும் தொழில்முனைவு ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai’) நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங்) நடத்தும் தொழில்நுட்ப விழாவான குருஷேத்திராவின் ஒரு பகுதியாக ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai’) நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்டார்ட் அப் (Startups) நிறுவனங்களை உருவாக்கும் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்களும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான மேடையாக ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai ) நிகழ்ச்சி அமையவுள்ளது.
‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend’) நிகழ்ச்சி தொழில்முனைவோர்கள், வல்லுனர்கள், வழிகாட்டிகள், பயிற்றுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் போன்றோர்களை இணைக்கும் மேடையாகவும், சக தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டிகள், வல்லுனர்கள் போன்றோர்களை சந்தித்து உரையாடி ஊக்கம் பெறுவதற்கான வாய்ப்பாகவும் ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சி அமைகிறது.
ஸ்டார்ட் அப் வீக்கெண்ட் நிகழ்ச்சியின் நோக்கம்
தொழில்முனைவு ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, விவாதித்து, ஒராணியாக செயல்பட்டு, புதிய பொருட்கள், சேவைகளை மற்றும் நிறுவனங்களை உருவாக்க வழி வகைச் செய்வதுதான் இதன் நோக்கம்.
யார் பங்கேற்கலாம்?
தொழில்முனைவு ஆர்வம் உள்ளவர்கள், புதுமைக்கான தொழில்முனைவு எண்ணம் கொண்டவர்கள், தொழில்நுட்ப ஹேக்கர்ஸ்கள் (Hackers), துறை வல்லுனர்கள் (Domain experts), தொழில்நுட்பத் திறன் உள்ள வடிவமைப்பார்கள் (Designers) போன்றோர்கள் பங்கேற்கலாம். கல்வித்தகுதி ஒரு பிரச்சனை இல்லை.
கட்டணம்
‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமாக ரூபாய் 2500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
செந்தில் ராமசாமி : +91 9500154950,
இலக்கியா : +91 9790993074
இணையத்தள முகவரி: http://www.up.co/communities/india/chennai-tamil-nadu-india/startup-weekend/8316/
PLEASE READ ALSO: நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்