உங்கள் தொழிலை வாடிக்கையாளர்கள் தொடர்புக்கொள்ள : கிளவுட் சார்ந்த அழைப்பு (cloud telephony) சேவையை அளிக்கும் 5 நிறுவனங்கள்

Share & Like

ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களை தொடர்பு கொள்ள பல வழிகளை கையாளுகின்றன. உதாரணமாக ஈமெயில், தொலைபேசி, live chat போன்ற பல தொடர்பு வழிகளை தொழிலுக்கு பயன்படுத்துகின்றன. வாடிக்கையாளர்கள் தொலைபேசியின் மூலம் நிறுவனத்தை தொடர்புக் கொள்ளும் போது அவர்களுக்கு நேரடியாக பேசிய உணர்வும், நிறுவனத்துடன் ஒரு பிணைப்பும் ஏற்படும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் விரைவாக செயல்பட தொழிலின் எல்லா சேவைகளிலும் தொழில்நுட்பத்தை புகுத்தலாம். இதேபோல் தொலைபேசி தொடர்புகளிலும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. கிளவுட் சார்ந்த அழைப்பு மேலாண்மை அமைப்பு (cloud based call management system) தொழில்நுட்பம் தொலைபேசி அழைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

Cloud Telephony
Img Credit: cfoni.com

 
இதில் தொழில் தொடர்புக்கு தேவையான IVR, virtual number, toll-free number, cloud EPABX, automatic call distribution, அனைத்து கண்காணிப்பு (call tracking) மற்றும் பதிவு (recording), அறிக்கைகள் (reports) ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

#  Exotel 

Exotel தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய cloud telephony நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் பல வாடிக்கையாளர் தொலைபேசி தொடர்பு மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. Virtual Numbers,  Multi level IVR, Call Recordings, Call Analytics, CRM & Helpdesk Integration, Real Time Notifications, Voice Mai, Number Masking, Missed call services, Conditional Call Routing போன்ற பல அழைப்பு சேவைகளை வழங்குகிறது.

தொழிலின் அளவிற்கு தகுந்தாற்போல் Exotel ன் திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சில நாட்களுக்கு Exotel இலவச சேவைகளை அளிக்கிறது.

Uber, Ola, Flipkart, Quikr, redbus.in, Expedia, sulekha.com, Urban Ladder, xiaomi, OYO, Practo, shell போன்ற பல நிறுவனங்கள் Exotel யின் கிளவுட் சார்ந்த அழைப்பு சேவைகளை பயன்படுத்துகின்றன. 

#  MyOperator

MyOperator கிளவுட் சார்ந்த அழைப்பு மேலாண்மை அமைப்பை வழங்குகிறது. தொழில்களுக்கு தொலைபேசி அழைப்புகள் சார்ந்த IVR, virtual number, toll-free number, cloud EPABX, automatic call distribution, call tracking, recording மற்றும் reports போன்ற சேவைகளை வழங்குகிறது. 

MyOperator கிளவுட் சார்ந்த அழைப்பில் தொழிலுக்கு தேவையான டோல் பிரீ எண் (toll free) மற்றும் மொபைல் எண்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நிறுவனத்திற்கு வரும் அழைப்புகளுக்கு IVR (Interactive voice response) குரல் பதிலை அமைத்துக் கொள்ளலாம். இடம் சார்ந்த, தொடர்பு சார்ந்த அல்லது நேரம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு குரல் பதிலை Myoperator யில் அமைக்கலாம்.

தொழிலின் அளவிற்கு தகுந்தாற்போல் MyOpertor ன் திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நிறுவனத்திற்கு தேவைப்படும் சேவைகளுக்கு ஏற்றவாறு கட்டணங்கள் (pricing) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Snapdeal, Shop.IRCTC, Canon, Fabindia, Cashkaro, DHL, ஆம் ஆத்மி கட்சி, Aamrapali O2, Lenskart,  Berger Emulsions, Allschoolstuff மற்றும் Network Bulls போன்ற பல நிறுவனங்கள் இதன் தொலைபேசி அழைப்பு சேவைகளை பயன்படுத்துகின்றன.

#  Knowlarity

Knowlarity தொலைபேசி அழைப்பு (cloud telephony) சேவைகளை வழங்குகிறது.   virtual number solutions, virtual PBX,  virtual phone systems, IVR, Toll Free Number, International Number, Click to call, virtual number, call center, call recording, text and voice messages , order confirmation over IVR போன்ற பல சேவைகளை அளிக்கிறது. 

Knowlarity யின் சேவை கட்டணங்கள் (pricing) தொழிலின் அளவிற்கு  ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. Fortis hospital, HT media, Reliance foundation, The Apollo clinic போன்ற பல நிறுவனங்கள் இதன் கிளவுட் சார்ந்த அழைப்பு சேவைகளை பயன்படுத்துகின்றன. 

#  Ozonetel

Ozonetel தொலைபேசி அழைப்பு (cloud telephony) மற்றும் கிளவுட் கால் சென்டர் தீர்வுகள் அளிக்கிறது. IVR, Automatic Call Distribution (ACD), Call monitoring, Call recording, Multi channel communication, SMS service, Email handling, CRM integration போன்ற அழைப்பு சார்ந்த தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது.

Wipro, NIIT, Intuit, Zomato, Bigbasket.com, foodpanda, indiamart.com, shaadi.com போன்ற பல நிறுவனங்கள் Ozonetel யின் வாடிக்கையாளராக உள்ளன.

#  MCube

MCube கிளவுட் சார்ந்த அழைப்பு  சேவையை வழங்குகிறது. virtual PBX (Private Branch Exchange), IVRS, multi-level call routing, automatic call log maintenance, call recording and call tracking போன்ற பல அழைப்பு சார்ந்த சேவைகளை வழங்குகிறது.


Please Read This Article For Your Growth: 

எலன் மஷ்க் (Elon Musk)

Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்

 


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons