பணத்தைத் தாண்டிய முதலீடுகள்
தொழில் செய்ய துடிக்கும் பெருபாலானோர் ஒரு பிரச்சனையாக கருதுவது அதற்கான முதலீடு என்னிடம் இல்லை என்பதுதான் . இங்கு முதலீடு என்று நாம் பெரும்பாலும் நினைத்து கொண்டிருப்பது பணத்தை பற்றிதான் .நாம் மற்றவர்களிடம் தொழில் செய்ய ஆசையில்லையா என்று கேட்டால் அவர்களிடமிருந்து வரும் பதில் அதற்கான முதலீடு – என்னிடம் இல்லை !
பெருபாலானோர் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கி நிற்ப்பதற்கு காரணம், முதலீடு என்பதை முழுக்க முழுக்க பணத்தோடு பொருத்தி பார்ப்பதுதான்.
பணம் மட்டும் தான் முதலீடு என்றால் பரம்பரை பணக்கார வாரிசுகள் மட்டுமே தொழில் செய்திருக்க முடியும் . இன்றைக்கு நாம் காணும் மிகப் பெரிய தொழில் சாம்ராஜியங்கள் உருவானதிற்கு காரணம் பணம் மட்டுமல்ல .தங்கள் திறன் எதுவென்று அறிந்து, அதை தங்கள் தொழில் முதலீடு செய்ததன் விளைவாகத்தான் அவர்கள் மிகப்பெரிய தொழில் சாம்ராஜியத்தை படைத்திருக்கிறார்கள் .
நமக்குள்ளேயும் நம்மை சார்ந்தும் பல திறன்கள் நம்மிடம் இருக்கிறது. அது உழைக்கும் ஆற்றலாக இருக்கலாம் , மூளையாக இருக்கலாம், உலகஞானம்,தொ ழி ல்நுட்ப அறிவு , தலைமை பண்பு, வித்தியாசமாக சிந்திக்கின்ற அறிவு ,கற்பனை திறன் ,நேரம் காலம் பார்க்காமல் நினைத்ததை அடைய துடிக்கும் உழைப்பு ,விடா முயற்சி, நட்பு வட்டாரம் ,தொழில் வல்லுநர்களின் தொடர்பு, பேச்சுதிறமை , தேடிக்கொண்டே இருக்கும் மனம் , பேரார்வம ,பற்றி எரிகிற ஆசை (Burning Desire), திறமை ,தன்னம்பிக்கை ,தைரியம் ,நிர்வாகதிறமை ,தெளிவான குறிக்கோள்,எல்லாவற்றிடமும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை ….இப்படி இது போன்ற பல திறன்களும் முதலீடுதான்.
நீங்கள் செய்ய துடிக்கும் வியாபாரத்தில் எது உங்களிடம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறிர்களோ அதை முதலீடு செய்யுங்கள் . தொழில் தொடங்கவும் ,வெற்றி பெறவும் மிக முக்கியமானது அதுதான்.
உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் பணத்தை முதலீடு செய்யுங்கள் ,அறிவு அதிகமாக இருந்தால் அறிவை முதலீடு செய்யுங்கள் , இவை இரண்டையும் விட உழைக்கும் ஆற்றல் அதிகமாக இருந்தால் உழைப்பை முதலீடு செய்யுங்கள்.
எது உங்களிடம் அதிகமாக இருக்கிறதோ அதை முதலீடு செய்யுங்கள் .