MSME-DI வரையறுக்கும் – தொழில் நிறுவனங்கள் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள்:
நிறுவனம் இலாபகரமான முறையில் இயங்குவது தொழில் முனைபவருக்கு உற்சாகமூட்டும் விஷயம். ஆனால் சில நேரங்களில் தொழிலில் தேக்கமும், நலிவும் ஏற்படுகின்றன. திட்டம் தீட்டி முறைப்படி தொழில் நடத்தினாலும் வேறு சில சூழ்நிலைகளின் காரணமாக தொழில் நலிவுறுதல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
MSME-DI வரையறுக்கும் -தொழில் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள் :
- போதிய நிர்வாக அனுபவம் இல்லாமை.
- தொழிலை நடத்துவதற்குரிய முறையான திட்டம் மற்றும் எவ்வித எதிர்கால திட்டமும் தீட்டாமை,
- உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தில் உள்ள குறைபாடு,
- எவ்வித குறிக்கோள் இன்றி செயல்படுதல்.
- உற்பத்தி செய்யும் பொருள் பற்றிய முழு விவரங்களும் தெரியாமல் இருத்தல்,
- பொருட்களுக்கான தேவை இருந்தும் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருத்தல்,
- உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு தேவையான தொழில்நுட்பம் பற்றிய போதிய அறிவு இல்லாமை,
- உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்த தெரியாமை,
- விற்பனையில் உள்ள குறைபாடு மற்றும் விற்பனையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருத்தல்,
- கணக்கு, வழக்குகள் முறை சரியில்லாதிருத்தல்,
- முறையான பட்ஜெட் தயாரிக்காதது,
- நுகர்வோர் மற்றும் பொருட்களை வாங்குபவருக்கு ஒழுங்கான சேவைகள் அளிக்காமல் இருத்தல்,
- தேவைக்கு மேற்பட்டத் தொகையை இயந்திரம், நிலம், கட்டிடம் போன்ற அசையாச் சொத்துகளில் முடக்கி வைத்தல்,
- மூலப்பொருட்கள் தட்டுபாடு,
- கையிருப்பு சரக்குகளில் சரியாக கவனம் செலுத்தாமல், அதனால் நஷ்டம் ஏற்படுதல்,
செய்யக் கூடாதவற்றைத் தவிர்த்தாலே, நஷ்டமும், தேக்கமும் இல்லாமல் தொழிலைச் செய்யலாம்.