கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நிர்வாகியானார்
தமிழ்நாட்டில் பிறந்தவரான 43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு 1,353 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அளித்ததன் மூலம் அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நிர்வாகியானார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், சுந்தர் பிச்சைக்கு 2,73,328 கிளாஸ் சி பங்குகள் வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 199 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,353 கோடி). இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை வைத்திருந்த பங்கு மதிப்புடன் சேர்ந்து அவரது மொத்த பங்கு மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலராகியுள்ளது.
கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ்ஜிற்கு 34.6 பில்லியன் கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் தற்போது உள்ளன. மற்றொரு நிறுவனரான செர்ஹரி பிரினுக்கு 33.9 பில்லியன் கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள் வைத்துள்ளனர்.