தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை வெற்றி கதை
தமிழராலும் உலகின் மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர முடியும், சாதிக்க முடியும் என நிருபித்து காட்டியவர் சுந்தர் பிச்சை. தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டியவர்.தமிழர்களின் பெருமை. சுந்தர் பிச்சை தமிழரின் அடையாளம். சுந்தர் பிச்சை உலகின் மிகப் பெரிய நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரி.
இவரது ஒரு ஆண்டு வருமானம் 335 கோடி ரூபாய் . கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுந்தர் பிச்சைக்கு 2,73,328 கிளாஸ் சி பங்குகள் வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 199 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,353 கோடி). இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை வைத்திருந்த பங்கு மதிப்புடன் சேர்ந்து அவரது மொத்த பங்கு மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தலையை சுற்ற வைக்கும் வருமானம்.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
சுந்தர் பிச்சையின் இளமை பருவம்
சுந்தர் பிச்சை 1972-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தந்தை ரகுநாத பிச்சை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் மின் பொறியாளராக பணிபுரிந்தவர். தாய் லட்சுமி சுருக்கெழுத்தாளர். நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் சாதரணமான இரண்டு அறை உள்ள வீட்டில் வளர்ந்தார். சிறு வயதில் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார். ஆனால் குறிக்கோள் உடையராக இருந்தார். அவரின் 12 வயது வரை தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி என்று எதுவும் கிடையாது. இவரது தந்தை ஒரு ஸ்கூட்டர் வாங்க தனது சம்பளத்தில் மூன்று ஆண்டுகள் சேமிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிள்ளைகளின் படிப்பில் அவருடைய சேமிப்புகளை அனைத்தையும் செலவு செய்தார்.
அவருடன் படித்தவர்களால் அவரை அந்த அளவுக்கு ஞாபகம் வைத்திருக்கவில்லை. ஏனென்றால் அவர் பள்ளியில் கல்வியில் அந்த அளவுக்கு சிறந்த மாணவனாக இல்லை. ஆனால் கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கினார்.
PLEASE READ ALSO : வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை
சுந்தர் பிச்சையின் கல்வி
சுந்தர் பிச்சை 10-ஆம் வகுப்பு வரை ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்தார். மேல்நிலை படிப்பை ஐஐடி சென்னையில் வளாகத்தில் உள்ள . வனா வாணி மேல்நிலைப் பள்ளியில் படித்தார். தனது மெட்டல்அலர்ஜிக்கல் பொறியியல் (Metallurgical Engineering) படிப்பை ஐஐடி கரக்பூரில் முடித்தார். மெடிரியல் பொறியியலில் (Material Sciences and Engineering) முதுகலை படிப்பை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். வார்ட்டன் ஸ்கூல் ஆப் பென்சில்வேனியாவில் (Wharton School of the University of Pennsylvania) எம்பிஏ படித்தார்.
கூகுளில் சுந்தர் பிச்சையின் பங்கு
சுந்தர் பிச்சை 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன் அவர் மேலாண்மை ஆலோசகராக மெக்கென்சி நிறுவனத்தில் (McKinsey & Company) பணிபுரிந்தார். பின் இவர் செய்த சாதனைகள் பல. அக்டோபர் 2006-யில் கூகுளின் அழிவை தடுத்து நிறுத்தியவர் இவரே. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவே கூகுளின் இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம். மைக்ரோசாப்ட் விண்டோசின் தேடு பொறியை கூகுளில் இருந்து அவர்களின் bing-க்கு மாற்றினார்கள் இதன் விளைவாக 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கூகுள் இழந்தது. சுந்தரின் பிச்சையின் தீவிர முயற்சியின் மூலம் கூகுள் நிறுவனத்தை அழிவிலிருந்து தடுத்து நிறுத்தினார்.
PLEASE READ ALSO : SUBWAY Sandwich Restaurants-உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகம் வெற்றியடைந்த கதை
சுந்தர் பிச்சை 2008-ஆம் கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் Chrome and apps-யில் மூத்த துணை தலைவராக நியமிக்கப்பட்டார். Google Drive பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நவம்பர்,2009-ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Maps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை உருவாக்கிய ஆண்டி ரூபின் 2013-ஆம் ஆண்டு கூகுளிலிருந்து விலகியவுடன் கூகுளின் நிறுவனரான லாரி பேஜ் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் பொறுப்பையும் ஒப்படைத்தார். அக்டோபர் 2014 இல் கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Product Chief) நியமிக்கப்பட்டார். கூகுளின் உயிர் நாடியான கூகுள் chrome, ஆண்ட்ராய்டு, Chrome OS போன்ற பல பயன்பாடுகளை வெற்றி பெற செய்தவர்.
PLEASE READ ALSO: நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம்
கூகுளில் தலைமை செயல் அதிகாரி பதவி
2015-ஆம் ஆண்டு கூகுள் தனது தாய் நிறுவனமாக ஆல்ஃபபெட் உருவாக்கியது. ஆகஸ்ட், 2015-ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவிக்கு சத்திய நாதல்லாவுக்கு (Satya Nadella) ஒரு மாற்றாகவும் சுந்தர் பிச்சை இருந்தார். ட்விட்டர் நிறுவனமும் சுந்தர் பிச்சைக்கு வலை வீசி கொண்டு இருந்தது. கூகுள் நிறுவனமோ சுந்தர் பிச்சையை இழப்பதாக இல்லை எனவே சுந்தர் பிச்சையின் சம்பளம் உயர்ந்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு 1,353 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அளித்ததன் மூலம் அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நிர்வாகியானார். Jive Software Inc-ன் இயக்குனராக இருந்தார். Ruba Inc நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். சுந்தர் பிச்சை ஒரு தமிழனின் வெற்றி.