சிறியதிலிருந்து தொடங்குங்கள்
தொழிலை முதன் முதலில் செய்ய துடிப்பவர்களுக்கு ஆயிரம் செயல்முறைத் திட்டக்கனவு இருக்கும். பெரிய அலுவலகம் வேண்டும், விற்பனை பரப்பு பெரியதாக இருக்க வேண்டும்,அதிகமான ஊழியர்கள் ,விளம்பரத்தினை அனைத்து ஊடகத்தின் மூலமாக செய்ய வேண்டும், இன்னும் கனவு பட்டியல் நீழும். மார்கெட்டிங் சர்வே (Marketing Survey) செய்து தொழிலை தேர்ந்தெடுத்தாலும் முதலில் சிறியதிலிருந்து தொடங்க வேண்டும். இன்றைக்கு மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும் மிகச்சிறியவையாக தொடங்கபட்டவையே.
Walmart-ஐ தொடங்கிய சாம் வால்டன் (Sam Walton) முதல் Face Book-ஐ தொடங்கிய மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) வரை சிறியதாக தொடங்கியவர்களே. நம் தொழிலின் பண முதலீட்டினை பெரும்பாலும் நமது சேமிப்பும், வங்கி மற்றும் வெளியிலிருந்து பெறப்பட்ட கடனும்தான் நிறைவு செய்கின்றன. நமது திறனுக்கு மீறி ஆரம்பநிலையிலே பெரியதாக தொடங்கும்போது அதற்கான முதலீடுகளும் அதிகமாகவே தேவைப்படுகின்றன. எந்த தொழிலும் இலாபம் கொடுக்க சிறிது காலம் எடுக்கும் மற்றும் நம் தொழிலின் நுணுக்கங்களையும், நிர்வாகதிறனையும் ,செலவை கட்டுபடுத்தும் விதத்தையும் கற்றுக் கொள்ள சிறிது காலம் பிடிக்கும்.
தொழில் பெரியதாக இருக்கும் போது நமக்கான பொறுப்புகளும் (Obligation) அதிகமாகவே இருக்கும்.அது வாங்கிய கடனை (Liability) திரும்ப செலுத்துவதாக இருக்கலாம், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்வதாக இருக்கலாம், ஊழியர்களின் சம்பளமாக இருக்கலாம்.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
தொழிலில் நஷ்டங்கள், விற்பனை குறைவு , உற்பத்தி குறைவு ,சேவை குறைவு, ஊழியர் பிரச்சனைகள் போன்றவைகள் எழும் போது நமக்கான பொறுப்புகளை (Obligation) நிறைவு செய்வதிலும் பிரச்சனைகள் ஏற்படும். இந்த சூழ்நிலையில் நாம் மிகுந்த தடுமாற்றத்தை அடைந்து விடுவோம். இது எல்லா வளர்ந்த தொழில் முனைவோர்க்கும் ஏற்படும் பிரச்சனைகள்தான் என்றாலும் அவர்களுக்கான அனுபவங்கள் வேறு முதன் முதலில் தொழில் தொடங்கும் நமக்கான அனுபவங்கள் வேறு.
முதன் முதலில் தொழில் தொடங்கும் போது சிறியதாக தொடங்கி பிறகு படிப்படியாக சந்தை பரப்பையும், உற்பத்தி ,ஊழியர், அலுவலகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது மிகுந்த பலன் கொடுக்கும்.
தொழில் சிறியதிலிருந்து தொடங்க வேண்டுமே தவிர நம் குறிக்கோள்களும் , கனவுகளும் ,நோக்கங்களும் சென்றடைய வேண்டிய இடமும் மிகப்பெரியதாகவும், தெளிவாகவும் இருந்தால் மிகப்பெரிய சாம்ராஜியம் நம் கையில் வரும் அதுவும் விரைவில்.
வருங்காலம்,நம் வாசலுக்கு வரும் காலம் வரும்!
PLEASE READ ALSO: Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை