சின்னம் பெரிது பகுதி-6 : ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?

Share & Like

எப்படி தொலைதூர வாணிபத்திற்குச் செல்பவர்கள் தங்கள் இருப்பில் உள்ள தங்கத்தை ரோத்ஸைல்டு போன்ற பெரும் செல்வந்தரிடம் பத்திரப்படுத்தும்படி சொல்லிவிட்டு, அதற்கு இணையான ஹுண்டிக்களைப் பெற்றுச் சென்றார்கள் என்பதை நாம் போன கட்டுரையில் பார்த்தோம். நாட்டு எல்லைகளில் வணிகர்கள் மேசை போட்டு தங்கத்துக்கு ஈடான ரசீதுகளை வினியோகம் செய்தனர். மேசை என்பதற்கு லத்தீன் மொழியில் பங்கா (Bank) என்று பெயர். இப்படித்தான் வங்கிகள் தோன்றின. அச்சுப்பணம் புழக்கத்தில் வந்தது.

ரோத்ஸைல்டுகள் எல்லா நாட்டிலும் கிளைபரப்பி கோலோச்சினர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் இருப்பில் இருக்கும் தங்கத்திற்கு பன்மடங்காக அதிக மதிப்புள்ள அச்சடித்த காகிதங்களை வினியோகித்தனர். இதற்கு அவர்கள் ஃப்ராக்ஷனல் ரிசெர்வ் (professional reserve) எனும் மாய விதியை உருவாக்கினார்கள். அதாவது ஒரு வங்கி தன்னிடம் இருக்கும் தங்க இருப்பைப்போல் 16 மடங்குவரை அதிக மதிப்புள்ள தொகைக்கு ரசீதுகள் அல்லது ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யலாம்.

money

எப்போது ஒரு தேசத்தின் தங்க இருப்பைவிட அதிகமாக அச்சுப்பணம் (fiat money) புழக்கத்தில் உள்ளதோ, அப்போது பணவீக்கம் (inflation) அதிகமாகும். இதைக் கட்டுக்குள் கொண்டுவரவே காசோலைகளும், கடன் அட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் இந்தியா போன்ற வேளாண் பொருளாதாரம் மையமாக உள்ள நாடு சேவை பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்ததால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு எப்படி மீண்டும் தன் நாட்டின் வரி வசூலிக்கும் உரிமையை அமெரிக்க சாளரம் வழியாக பூர்வகுடி ரோமர்களிடமே கொடுத்துவிட்டது என்று பார்ப்போம்.

உலகின் முதல் தனியார் வங்கி பேங்க் ஆஃப் இங்கிலாந்துதான். இங்கிலாந்து அரசாங்கம் திவாலாகும் நிலையிலிருந்தபொழுது அதற்கு 1.25 மில்லியன் பவுண்டுகள் கடனாகக் கொடுத்து அதற்குப் பதிலாக இங்கிலாந்து மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமையையும், பவுண்டுகளை அச்சடிக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டது. அமெரிக்கா ஒரு நாடு என்பதைவிட பிரிட்டனின் கம்பெனி என்று சொல்வதுதான் சாலச் சிறந்தது.

பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளில் ஒரு காலத்தில் இங்கிலாந்தின் காலனியாக இருந்து இன்று சுதந்திரம் பெற்ற 52 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நாடுகளிலிருந்து சுதந்திரத்துக்குமுன் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கட்டிய வரி போக தனிப்பட்ட முறையில் ராணியின் சொத்துக் கணக்கில் சேர்ந்த வெகுமதிகளான அரிய வகைக் கற்கள், ஓவியங்கள், சிலைகள் இவை எவற்றிற்கும் வரி கிடையாது.

இந்த 52 நாடுகளில் எங்கு வங்கி துவங்கினாலும் உலகின் பொருளாதார மையமான லண்டன் இன்னர் சிட்டியிலிருந்துதான் முதலீடுகள் வரும். இது square mile என்றும் அழைக்கப்படுகிற ராணியின் தனிப்பட்ட பரம்பரைச் சொத்து. இங்கு வசிப்பவர்கள் எல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் ரோமிலிருந்து தேம்ஸ் நதிக்கரையோரம் குடிபெயர்ந்தவர்கள்.

britain

சுதந்திரம் பெற்ற பின்பும் நாங்கள் நேரடி பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடாக இருக்க முடியாது என்று குரல் எழுப்பிய இந்திய ஆட்சியாளர்களை 1926 ஆம் ஆண்டு ஒப்பமிட்ட Balfour Declaration மற்றும் 1931ல் உருவான statute of Westminster ஐ காட்டி வாயை அடைத்தது. இருப்பினும் சமாதானத்திற்காக British எனும் வார்த்தை நீக்கப்பட்டு Common Wealth of Nations என்ற பெயர் வைக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரிட்டிஷ் ராணியின் நேரடிப் பிரதிநிதி. காமன்வெல்த் நாடுகளில் யார் யாருடன் எப்போது போர்தொடுக்க வேண்டும் என்பதை ராணி எப்போதுவேண்டுமானாலும் முடிவு செய்யலாம். அதற்கான ஆயுத வினியோகத்தை அமெரிக்க கம்பெனி பார்த்துக்கொள்ளும். வஞ்சகன் மன்னனடா, வருவதை எதிர்கொள்ளடா என்று செஞ்சோற்றுக் கடன் பற்றி பேச கனடா அமைதிக்குழு ரத்தவிலாரியிலிருக்கும் நாட்டிற்குப் பேரம் பேச வரும்.

இந்திய அரசுக்குச் சொந்தமான Reserve Bank of India (RBI) உண்மையில் நாம் உபயோகிக்கும் பணத்தை வெளியிடும் அமைப்பு அல்ல. அது பாரத ரிசர்வ் பேங்க் முத்ரன் இந்தியா (Bharat Reserve Bank Mudhran India) வின் கிளை. அதுவும் (BRBMI Private Limited) எனும் தனியார் சொத்து.

money

ஒரு தேசம் எவ்வளவு fiat money அச்சடிக்கலாம் என்பதை சில சர்வதேச அமைப்புகள்தான் நிர்ணயிக்கின்றன. அவற்றில் சில Alliance for Financial Inclusion (AFI), Asian Clearing Union (ACU). இவை United Nations Economic and Social Comission for Asia and Pacific (ESCAP) என்ற அமைப்புக்குக் கட்டுப்பட்டவை. ESCAP அமைப்பு  United Nations, World Bank, International Monetary Fund (IMF) ஆகிய சர்வதேச அமைப்புகளுக்குச் சொந்தமானவை. Alliance for Financial Inclusion (AFI) ஐ உருவாக்குவதற்கான மொத்த செலவையும் Bill and Melinda Gates Foundation ஏற்றுக்கொண்டுவிட்டது.

ESCAP யில் கிழக்காசிய பசிஃபிக் நாடு அல்லாத பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. ஆகவே மக்களே உங்கள் அருகில் RBS, DBS என்று புதிதாக ஓர் தனியார் வங்கி கிளை திறந்தால் உடனே ஓடிப்போய் அதில் குறைந்த வட்டிவிகித்ததில் கடன் தருவார்களா? அப்படியானால் சரி என்று அவர்கள் கேட்ட இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு வராதீர்கள். அவர்களிடம் நீங்கள் சேமிப்பில் வைப்பது உண்மையான பணம், அடமானம் வைப்பது உண்மையான சொத்து.

ஆனால் அவர்கள் கொடுக்கும் கடன் ஃப்ராக்ஷனல் ரிசர்வ் கணக்குப்படி அது fiat money. அதுவும் நீங்கள் ரூபாயில் கடன் பத்திரம் எழுதினாலும் அவர்கள் அதை அவரவர் நாட்டு கரன்சியில்தான் வைப்புக் கணக்கு எழுதுவார்கள். உதாரணத்திற்கு DBS என்றால் The Devolopment Bank of Singapore Limited. நீங்கள் சேமிக்கும், கடனாக வாங்கும் பணம் சிங்கப்பூர் டாலரில் தான் கணக்கு வைக்கப்படும். கடன் அட்டைகளிலிருந்து (Credit Card) சகலமும் இந்த அடிப்படையில்தான் இயங்குகிறது.

ஆக ஒரு தேசம் தன்னிடம் உள்ள தங்க வைப்புக்கு இணையான பணத்தைத்தான் அச்சிட முடியும். அதை அச்சிடும் உரிமையும் தனியார் வசம்தான் இருக்கிறது. அதிக பணம் அடித்தால் அதிக வரி கட்ட வேண்டும். அதனால் பண வீக்கம் அதிகமாகி இன்னும் ரூபாயின் மதிப்பு குறையும். அதனால்தான் அதிக மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகளைக் காலத்திற்கு ஏற்ப அரசு அச்சிடுகிறது. பழைய சில ரூபாய் நோட்டுகளும், சில்லறைக்காசுகளும் வழக்கொழிந்து போய்விட்டன.

அதிக பணம் வங்கியிலிருந்து எடுக்கும்பொழுது எப்படி நாம் அவசர தேவைக்குப் போக இருப்பதை 1000 ரூபாய் நோட்டுக்களாக எடுக்கிறோமோ. அதே போல் ஓர் அரசு தன் சேமிப்புகளை கணிசமான அளவில் அதிக மதிப்பு உள்ள டாலர்களில் வைத்துக்கொள்கிறது.

இதனால்தான் அமெரிக்காவில் ட்வின் டவர் இடிந்தால் இங்கு இந்தியப் பங்குச்சந்தையில் அது எதிரொலிக்கிறது. எப்போது ஒரு நாணயத்தை அல்லது நோட்டை அச்சடிக்க அதன் மதிப்பைவிட அதிகமான செலவீனங்கள் ஆகின்றனவோ அப்போது அது வழக்கொழிந்து போகும்.    ( உதா: 10 பைசா நாணயம், 1 ரூபாய் தாள்)

அப்படியென்றால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பும் இருப்பதை என் வாழ்நாளில் நான் பார்க்கவே முடியாதா என்ற கேள்வி எழும்புகிறதா? முடியும் என்பதுதான் பதில். புதிய வாய்ப்புகளை இனங்காணுவதிலும், புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வதிலும்தான் அது இருக்கிறது.

தங்கத்தைவிட விலை மதிப்பான பொருட்கள் மூன்றுவகை :

1. போதைப் பொருள்,

2. எரிவாயு, எண்ணை, அணு ஆயுதம்,

3. புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்கள்.

இன்றுவரை ITC (Indian Tobacco Company) யின் ஆகப்பெரிய வருமானம் புகையிலை, சிகரட் மூலம் தான் வருகிறது. பெயரில் Indian என்று வருவதால் அது இந்தியாவிற்குச் சொந்தமானதல்ல. அது கம்பெனி சொத்து. கொக்கைன் ஹெராயின் போன்ற ஏனைய போதைப் பொருட்களை இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் விளைவித்து கொள்ளை மகசூல் செய்கிறது கம்பெனி. இவற்றை இயக்குவதில் மாஃபியா செயல்பாடுகளைத் திரைமறைவில் கம்பெனி கண்காணிக்கும். அதனால் போதைப்பொருள்களை அறவே தவிர்ப்பது என்ற முடிவு எடுத்தோமானால் அதிக பலன் கிடைக்கும். ஆனால் நடைமுறை சாத்தியம் கருதி அடுத்த இரண்டைப் பார்ப்போம்.

rockfeller

ராக்ஃபெல்லர் (Rockefeller) எண்ணெய்யை பயன்படுத்தி விளக்கு எரிக்கலாம் என்று கண்டுபிடிக்கும் முன்னரே பெட்ரோல் நம் பழங்குடி மக்களுக்கு பரீட்சயமான விசயம்தான். ஆனால் என்ன அதை பூமியிலிருந்து மிதமான சூட்டிலெடுத்து உடல் வலிக்குப் பூசும் தைலமாக நாம் பயன்படுத்தி வந்தோம்.

நாம் சுதாரிப்பதற்குள் அங்கு எடிசன் (Edison) மின்விளக்கு கண்டுபிடித்து ராக்ஃபெல்லருக்கு கல்தா கொடுத்தார். அதே சமயம் ஃபோர்ட் (Ford) டி-மாடல் கார்களைக் கண்டுபிடித்து ராக்ஃபெல்லரின் எண்ணை வியாபாரத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். உலகத்தின் காலில் சக்கரம் கட்டி விட்டவர் ஃபோர்ட், பகல் நேரத்தைக் கூட்டியவர், எடிசன், இவை இரண்டையும் எண்ணை ஊற்றி வளர்த்தவர் ராக்ஃபெல்லர்.

ஒரு கட்டத்தில் உலகின் 85% எண்ணைத் தேவைகளை ராக்ஃபெல்லரின் ஸ்டாண்டர்ட் ஆயில் (Standard Oil) நிறுவனம்தான் பூர்த்திசெய்து வந்தது.

எப்போதெல்லாம் போட்டியெழுந்ததோ அப்போதெல்லாம் லண்டனில் மணியடிக்கும். கம்பெனிக்கு கட்டுப்படாத எந்த வர்த்தகத்தையும் அரச குடும்பம் தழைக்கவிடாது. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விற்க முதல் தடை ரஷ்யாவின் ரூபத்தில் வந்தது.

ரஷ்யாவின் 75% சதவிகித நிலப்பரப்பு ஆசியாவில் இருந்தாலும், அதன் 75% மக்கள்தொகை ஐரோப்பாவில்தான் உள்ளது. தலையை ஐரோப்பாவிலும், வாலை ஆசியாவிலும் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடு என்பதால் அவர்களிடம் உள்ள எண்ணைக் கிடங்குகளில் சுத்திகரிப்பு தொடங்கிவிட்டால் ராக்ஃபெல்லரின் ஸ்டாண்டர்ட் ஆயில் ஸ்தம்பித்துவிடும். ஆதலால் மோதல் செய்வீர் என்று அலறினார் ராக்ஃபெல்லர் (Rockefeller). உடனே தன்வசம் உள்ள காலனி நாடுகளில் கிளைபரப்பும் உரிமையை ராணி தருவித்தாள். ரஷ்யாவின் கொட்டம் அடங்கியது.

அடுத்து வளைகுடா நாடுகள் தங்கள் எண்ணெய் பலத்தை உணர்ந்து அமெரிக்காவை எதிர்க்கத்துணிந்தன. தன் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் எண்ணெய்க்கு நிகராக டாலர்களைப் பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று கண்டிப்பு காட்டின. அதுமட்டும் நிகழ்ந்துவிட்டால் டாலரின் மதிப்பு குறைந்துவிடும். அதனால் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக்கொள்வதுபோல் இரட்டைக் கோபுர இடிப்பு நிகழ்த்தப்பட்டது. இரான் மீது போர் தொடுக்க பச்சைக்கொடியை தனக்குத் தானே காட்டிக்கொண்டது அமெரிக்கா. கடாஃபி, சதாம் ஹுசைன் கைதும், தூக்கிடலும் உலகறிந்தது. அதனால் நாம் அடுத்து என்ன என்று பார்ப்போம்.

India super power

இந்தியா அணு ஆயுத உற்பத்தில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதுவும் குறைந்த செலவில் திறன் வாய்ந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வல்லமை நம்மிடம் உள்ள விஞ்ஞானிகளிடம் இருக்கிறது. அதனால் நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகள் தங்கள் அணு ஆயுத சோதனைகளை இந்தியாவுடன் இணைந்து நடத்த ஆயத்தமாக உள்ளன. இதனால் ஆசிய துணைக்கண்டத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாய் இந்தியா உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.  

நாளை 3 ஆம் உலகப்போர் துவங்குமேயானால் எங்களால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற வகையில் 28 நாடுகள்( பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்) NATO ஒப்பந்தம் போட்டுள்ளன. இவர்களுக்கிடையே பொதுவான கரென்சியாக யூரோ (Euro) அறிமுகமான நாளிலிருந்து பிரிட்டனுக்கு மனக் கசப்பு. தொடர்ந்து பிரிட்டன் அதிக அளவில் பௌண்டையே (British Pound) உபயோகித்து வந்தது.

தன்னைவிடப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் முழு பயனையும் பெற்று விரைவாக முன்னுக்கு வருவது உலகின் உயர்குடியாக தன்னைக் கருதும் பிரிட்டனுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அன்மையில் ஐரோப்பியக் கூட்டியக்கத்திலிருந்து (Europe) தன்னை விடுவித்துக்கொண்டது (BREXIT).

கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெரசா மே (Theresa May) இனி ஆசிய இளைஞர்களின் பிரிட்டன் இளைஞர்களில் வேலை வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கர்ம சிரத்தையுடன் செயல்படுவார் என்பது திட்டவட்டமாகியுள்ளது. இதே நிலைமை அமெரிக்காவிலும் எதிரொலிக்கும்.

NATO போலவே கிழக்காசிய நாடுகள் SAARC எனும் கூட்டியக்கத்தை ஏற்படுத்திச் செயல்பட்டு வருகின்றன. EURO போன்றே BRICS எனும் கிழக்காசிய நாடுகளுக்கான பிரத்தியேக கரன்சியை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை 6 ஆம் கட்டமாக இந்த வருடம் இந்தியாவில் நடக்கவுள்ளது.

EURO வும் POUND ம் போல BRICS ம் சீன YUAN ம் மாறலாம். ஆனால் எது எப்படியோ இது நடந்துவிட்டால் டாலரின் வெளிநாட்டு வைப்பு விகிதம் 90% லிருந்து 50% மாகக் குறைந்துவிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் NATO விற்கு ஏற்பட்ட கதி SAARC நாடுகளிடையே ஏற்படாமல் இருக்க, BRICS கரன்சி வலுப்பெற நாம் inclusive globalisation அதாவது நம்மைவிட 2படி கீழே உள்ள நாட்டை நம்மால் இயன்ற அளவு மேலே தூக்கிவிட வேண்டும்.

அடுத்த வல்லரசுக்கான போட்டியில் நாம் சீனாவை பின்னுக்குத் தள்ளவேண்டுமென்றால் நாம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களைப் பதிவுசெய்வது, சீனாவிலிருந்து இறக்குமதிக்கு நிகரான ஏற்றுமதியைப் பெருக்குவது, அந்நிய முதலீட்டைக் குறைத்து, பண வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது போன்றவையெல்லாம் சாத்தியமாக வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம் தலையாயக் கடமையானது புடம்போட்ட இந்திய அறிவுஜீவிகளை நம் நாட்டில் தக்கவைத்துக்கொள்வது.

இது தகவல் தொழில்நுட்ப யுகம். இணையம்தான் இன்றைய திரைகடல். அதில் தகவல்தான் எண்ணை. நாசாவில் உலகின் முதல் ராக்கெட்டைக் கண்டுபிடித்தவன் இந்தியன் (திப்பு சுல்தான்) என்பதை ஆவணப்படுத்தியிருப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்ததாக டாக்டர். அப்துல் கலாம் தன் சரிதையான அக்னிச் சிறகுகளில் குறிப்பிட்டுள்ளார். அவரைப்போன்று லட்சோபலட்ச இளைஞர்கள் தன் நாட்டுக்காகப் பாடுபட முன்வரவேண்டும்.

டாக்டர். அப்துல் கலாம் நினைத்திருந்தால் என்றோ ரத்தினக்கம்பளத்தின் மீதேறி இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என்று சொல்லிவிட்டு NASA வில் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஆனால் அதே கம்பளத்தில் நடந்துவரும் தன் சகோதர சகோதரிகளை சற்றும் எதிர்பாராத பொழுது இழுத்துவிட்டு அவர்களின் நாட்டு சந்தைப் பொருளாதாரத்தை நிலைகுலையச்செய்யும் அமெரிக்கா என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

MAYISWAMY ANNADURAI

அவரை அடியொற்றி இன்று ISRO வை வழி நடத்தும் மற்றொரு தமிழரான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் இந்தியா 7 சாட்டலைட்களை விண்வெளிக்கு அனுப்புவதில் தொடர்வெற்றி புரிந்ததன் மூலம் The Indian Regional Navigation Satellite System (IRNSS) எனும் இந்தியாவிற்கான பிரத்தியேக GPS ற்கு இணையான ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் நம் நாட்டு வரைபடத்தை (போர்களால் தினம் தினம் மாறிவரும் எல்லைகளை) ரோமிங் கட்டணம் இல்லாமல் குறைந்த விலையில் பெறலாம். இதுவரை நாம் இயக்கும் எல்லாக் கப்பல், விமானப் பயணங்களுக்கான பாதையையும், சாதாரண சாலைப் போக்குவரத்திற்குக்கூட GPS உரிமமாக நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கம்பெனி வழியாக ராணிக்குக் கப்பம் கட்டிவிட்டுத்தான் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அதுவும் முக்கியமான போர்களின்பொழுது (குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான) நமக்கு அந்தத் தகவல் கிடைக்காதவாறு அமெரிக்கா பார்த்துக்கொள்ளும். இனி அந்தத் தொல்லை அறவே இல்லை.

ரஷ்யாவின் Glonass, ஐரோப்பாவின் Galileo, சீனாவின் BeiDou வையடுத்து இந்தியா இந்த இமாலயச் சாதனையைச் செய்துள்ளது. அதற்கு நாம் சூட்டியுள்ள செல்லப் பெயர் NAVIC. தமிழில் மாலுமி.

பல்லாயிரம் வருடங்களாகப் புயலையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாது வானம் பார்த்தபடியே கடலோடியாகவே தன் வாழ்வைக் கழித்துவரும் இந்திய மாலுமியின் ஞாபகார்த்தமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் அறிவித்தார். அப்படிப்பட்ட கடலோடிகளில் முன்னோடியான தமிழனே அந்தப் பெருமையை மீட்டெடுத்தில் நாம் பெருமிதம்கொள்ள வேண்டும்.

உலக நாடுகள் அனுதினம் புதுப்புது கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்து கொட்டும் சந்தையாக நாம் எப்படி மாறிவிட்டோம். இந்தத் தொடர் தாக்குதலை மொழி, பண்பாடு, கலாச்சாரம் எனும் கேடயத்தைப் பயன்படுத்தி எப்படி நாம் மீண்டெடுக்கப்போகிறோம் என்பதைத்தான் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு துறைவாரியாக இனி நாம் பார்க்கப் போகிறோம்.

உலக அரங்கில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் தங்கள் நாணயத்திற்குப் பெயர் போனவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் திறனைச் சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்குச் செலவிட்டால் நம் ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக எழுவது சாத்தியமே.

அந்த வகையில் ஜில்லட் (Gillette) உருவான கதையை ஏற்கனவே படித்தோம். அடுத்து ஒரே சந்தையிலிருந்து பிரிந்த இரண்டு பிராண்டுகள்அடிடாஸ் (Adidas), பூமா (Puma) சகோதரர்கள் பற்றிய கதையைப் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


Please Read Also:

India super powerசின்னம் பெரிது பகுதி


Share & Like
Karthikeyan Pugalendi
Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications.
I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles.

My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.
Karthikeyan Pugalendi on FlickrKarthikeyan Pugalendi on Google

Karthikeyan Pugalendi

Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications. I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles. My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.

Show Buttons
Hide Buttons