உலக சித்தர் மரபுத் திருவிழா 2016 : இது ஒரு புதுமையான மரபுத் திருவிழா
“உலக சித்த மருத்துவ அறக்கட்டளை” தமிழர்களின் வாழ்வியலில் உள்ள மரபுகளை ஒன்றிணைத்து “உலக சித்தர் மரபுத் திருவிழா 2016” ஒன்றினை வரும் ஆகஸ்ட் 13 – 14 தேதிகளில் காலை 9:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை ஆர்.ஏ.புரம் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்களை அழைத்து மரபு விதைகள் , இயற்கை விவசாயம், சித்த மருத்துவ முகாம் , மூலிகைக் கண்காட்சி, பாரம்பரிய உணவு மற்றும் சமையல் , வீட்டுத் தோட்டம், மரபுக் கால்நடை, வர்மக்ககலை, ஒகப் பயிற்சிகள், நினைவாற்றலை வளர்க்க, பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் கவனகர் நிகழ்ச்சி, மண்பாண்டங்கள் மற்றும் செய்முறை, மரபு விளையாட்டு, மரபுக் நிகழ்ச்சிகள், கலை கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை, தமிழிசை என்று 20 க்கும் மேற்பட்ட கருத்துக்களில் கண்காட்சிகள், கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் நடக்க இருக்கின்றன.
உலகின் தலைசிறந்த சித்த மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற உலக சித்தர் மரபுத் திருவிழா நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமையும்.
நடைபெறும் இடம் மற்றும் நாள்
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
11&13, துர்க்கபாய் தேஷ்முக் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை-28.
நாள் : 13 – 14 Aug 2016, காலை 9:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை