தமிழர்களுக்கு பெருமைச் சேர்த்த ஆஸ்கார் நாயகன் கோட்டலங்கோ லியோன்

Share & Like

திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள் ஆகும். ஆஸ்கர் விருதுகள் நடிப்பு, சிறந்த திரைப்படம், பட இயக்கம், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு சினிமாவில் தொழில்நுட்பத்திற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

கோட்டலங்கோ லியோன்.

ஒருவர் மும்பையில் கல்வி பயின்ற ராகுல் தாக்கர். மற்றொருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோட்டலங்கோ லியோன் (Cottalango Leon). ஆஸ்கார் விருதை பெற்ற இரண்டாவது தமிழர் இரண்டாவது தமிழர் ஆவார். முன்பு ஏ.ஆர். ரகுமான் சிறந்த  இசைக்கான ஆஸ்கார் விருதை பெற்றிருந்தார்.  அதோடு கோட்டலங்கோ லியோன் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட மேடையில் அனைவருக்கும் நன்றி என்று தமிழில் கூறினார். இரண்டாம் முறை தமிழ் பேசிய ஆஸ்கார் மேடை!

இளமைப் பருவம் மற்றும் பணி :

கோட்டலங்கோ லியோனின் பூர்வீகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடி. 1971 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்தவர். இவரது தந்தை லூர்து, தாயார் ராஜம் ஆசிரியர் பணிக்காக கோவைக்கு வந்து, கோவை புறநகரில் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையத்திற்கு குடிபெயர்ந்தனர். லியோன் 7 ஆம் வகுப்பு வரை கள்ளப்பாளையம் அரசு பள்ளியிலும் பிறகு கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளி படிப்பை முடித்தார். இவர் பள்ளிப் படிப்பை தமிழ் வழி கல்வியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1992 இல் கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றார்.  பிறகு டில்லியைச் சேர்ந்த Softek LLC  நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பணியாற்றினார். 

ஜுராசிக் பார்க் படத்தினால் ஈர்க்கப்பட்டு சினிமா தொழில்நுட்பத்தில் சாதிக்கவேண்டும் என்று முடிவு செய்தார். இதனால் 1996 -ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை கம்பியூட்டர் கிராபிக்ஸ் (computer graphics) துறையில் முடித்தார்.

அமெரிக்காவில் சோனி இமேஜ் ஒர்க்ஸ் (Sony Pictures Imageworks ) நிறுவனத்தில் 1996 இல் சேர்ந்தார். இப்போது சோனி இமேஜ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் முதுநிலை மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கோட்டலங்கோ லியோன், மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதியுடன், அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வருகிறார்.

லியோன் பணியாற்றிய படங்கள்

ஸ்பைடர் மேன் (Spider Man), மேன் இன் பிளாக் (Men In Black), ஹொட்டல் டிராஸ்லிவானியா (Hotel Transylvania), தி ஸ்மர்ஃப்ஸ் (The Smurfs), கிளோடி வித் எ  சான்ஸ், ஆஃப் மீட் பால்ஸ் (Cloudy with a Chance of Meatballs), ஒபன் சீசன் (Open Season) மற்றும் ஸ்டுவர்ட் லிட்டில் (Stuart Little) போன்ற ஹாலிவுட் படங்களில் கோட்டலங்கோ லியோன் பணியாற்றி உள்ளார்.


PLEASE READ ALSO: தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை வெற்றி கதை


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons